Monday, June 27, 2011

அன்றும் இன்றும்

விடிய காலம ஆறு மணி. அலாரம் அடிக்க தொடங்கிற்று. கிழமை நாள் எண்டா, குளிரையும் பாக்காம ஆறுமணிக்கு எழும்பி வேலைக்கு ஓட வேணும். சனிக்கிழமையாவது இழுத்து போத்திக்கொண்டு படுப்பம் எண்டா அதுக்கும் இப்ப ஏலாது. மகனுக்கு ஏழரைக்கு football match . இப்ப எழுமபினாதான் அவனையும் எழுப்பி, வெளிக்கிடுத்தி, ground ஐ தேடிப்பிடிச்சு போறதுக்கு சரியா இருக்கும்.
சனிக்கிழமை எண்டாலே எங்கட ஆட்களுக்கு பிஸியான நாள்தான். விடிய காலமா ஐந்து மணிக்கு flemington market எண்டு தொடங்கி, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், பியானோ கிளாஸ், மிருதங்கம் கிளாஸ், swimming கிளாஸ், தமிழ் கிளாஸ், தேவாரக் கிளாஸ், இதைவிட soccer , கிரிக்கெட், டென்னிஸ் மேட்ச் எண்டு விடிய எழும்பி , அம்மா அப்பா ரெண்டு பேரும் பிள்ளையளை கூட்டிக்கொண்டு ஒவ்வொரு பக்கத்தால
ஓட தொடங்கினா, வீட்ட வர இருட்டீரும்.

எழும்ப மாட்டன் எண்டு அடம் பிடிச்சவனை, ஒருமாதிரி எழுப்பி, அரை குறை தூக்கத்தில இருந்தவனுக்கு, football uniform ஐ போட்டு, boots ஐயும் கால் கட்டுற மட்டையையும் மாட்டி வெளிக்கிடுத்திரதுக்குள்ள போதும் போதும் எண்டு போச்சு.

அந்த நாளில நாங்கள் இப்பிடியா. நாட்டு பிரச்சினையையும் பார்க்காமல், foolball match எண்டா, வீட்டையும் சொல்லாமல் வெளிக்கிட்டு ஓடிருவன். ஒருக்கா யாழ்ப்பாணத்தில tournament . விடிய காலம போன நாங்கள் பொழுதுபடும் மட்டும் வரேல்ல. ஊருக்க பத்து பதினைந்து பெடியளை
ஒண்டா காண இல்லை எண்ட உடனே "எல்லா பெடியளும் சேர்ந்து இயக்கத்துக்கு போட்டாங்கள்" எண்டு சனம் கதை கட்டி விட்டிட்டுது. . அண்டைக்கு இரவு, tournament ஐ வெண்டு, பரிசழிப்பு விழாவில champion cup ஐ வாங்கிகொண்டு கடைசி பஸ்ஸை பிடிச்சி வீட்ட வந்தா, எல்லாருக்கும் நல்ல பூசைதான் கிடைத்தது. எல்லாம் ஒழுங்கா நடந்திருந்தா, நானும் ஒரு நல்ல foolball player ஆ வந்திருப்பன் எண்டு இப்பவும் நினைக்கிறதுண்டு.



கார்ல
ஊர் முழுக்க சுத்தி, ground ஐ தேடி பிடிக்கிறதுக்குள்ள, அவன் திருப்பி நித்திரையாய் போனான். காறை நிப்பாட்டி, வரமாட்டன் எண்டு அடம் பிடிச்சவனை, ground இல இருக்கிற காண்டீனில BBQ sauage வாங்கி தாறன் அது இது எண்டு சொல்லி ஒருமாதிரி ground க்கு இழுத்துக்கொண்டு வந்திற்ரன். Team இல நானும் இன்னொருத்தனும் தான் எங்கட இனம். மிச்ச எல்லாம் வெள்ளையள். வெள்ளையள் எல்லாரும் முதலே வந்திற்றாங்கள். எங்கட மற்ற ஆளை இன்னும் காணேல்ல. கொஞ்ச நேர warmup க்கு பிறகு, match தொடங்கிற்று. பெடியள் விளையாடுறாங்களோ இல்லையோ, அப்பாமார் எதோ premier league match இல பெடியன் விளையாடுரறதா நினைச்சு கத்திக்கொண்டு நிண்டிச்சினம். நானும் என்ர பங்குக்கு அவையோட சேர்ந்து கத்திக்கொண்டு நிண்டன். half time break நேரமும் மகன் BBQ sauage கட்டாயம் வாங்கி தர வேணும் எண்டு ஞாகப படுத்திற்று போனான்.
match முடிஞ்ச உடனே நேர காண்டீனுக்கு ஓடிட்டான்.
BBQ sauage ஐ வாங்கி குடுத்து வீட்ட கூட்டியரேக்க " என்ன football விளையாட பிடிச்சிருக்கா எண்டு கேட்டன். அதுக்கு மகன் நீண்ட யோசினைக்கு பிறகு சொன்னான். " I don't know. but I like the BBQ sauage"

1 comment:

எஸ் சக்திவேல் said...

>எல்லாம் ஒழுங்கா நடந்திருந்தா, நானும் ஒரு நல்ல foolball player ஆ வந்திருப்பன் எண்டு இப்பவும் நினைக்கிறதுண்டு.
நல்ல காலம்!. அதாவது பிரபல காற்பந்து வீரர்களுக்கு- ஒரு போட்டியாளர் குறைந்தார்.