Wednesday, July 27, 2011

நடுங்கல் கூடம்

  Enginnering faculty  இல இருக்கிற lab களில் ஒன்று Vibration Lab, தமிழில சொல்லுறதெண்டால் நடுங்கல் கூடம் எண்டு சொல்லலாம்.  அங்க தியரி தெரியாமல் practical  class  க்கு போனால் திரத்தி விட்டிருவங்கள். அதனால அங்க practical  class  க்கு போற எல்லாரும் நடுங்கி கொண்டுதான் போறவ. அந்த Lab க்கு
    பொறுப்பா இருக்கிறவர் பேராசிரியர் மகாலிங்கம்.  Vibration இல அவர் செய்த ஆராச்சியை மெச்சி அவருக்கு ஒரு அவருக்கு ஒரு ஜெட் விமான இயந்திரத்தை பரிசாக கொடுத்தவை. அது Enginnering faculty வாசலில அழகா வைக்கபட்டிருக்கு. நாங்கள் அதை பக்கத்தில நிண்டு போட்டோ எடுக்க பாவிக்கிறனாங்கள். 
Engineering faculty க்கு பக்கத்தில இருக்கிற அக்பர் விடுதிக்கு சந்நியாசி மடம் எண்டும் ஒரு பெயர் இருக்கு. இன்ஜினியரிங் படிக்கிற ஆட்களில் 95 வீதம் பெடியள். அவங்களுக்கு எண்டு கட்ட பட்டதுதான் இந்த அக்பர் விடுதி. இங்க தன்கிற பெடியள் காதல் கத்தரிக்காய் எண்டு சுத்தாத அநியாயத்துக்கு "நல்ல"  பெடியள் எண்டதால மற்ற பீட பொண்ணுகள் வைத்த பெயர்தான் சந்நியாசி மடம். 
 பீடம் விட்டு பீடம் போய் காதல் கீதல் பண்ணாட்டியும் எங்கட பீடத்தில ஒரு நிகழ்ச்சி எண்டா பெடியளை பிடிக்கேலாது.
அது பொறியியல் பீடத்தில exhibition  நடந்து கொண்டிருந்த நேரம்.மற்ற campus   சனம், ஸ்கூல் சனம்,ஊர் சனம் எண்டு ஒரே சன கூட்டம். எல்லா பெடியளும் பிஸியா இருந்த நேரம்.Dental  faculty  தமிழ் girls உம் ஒரு gang  ஆக வந்திருந்தினம். 
 அவை  அப்பதான் Tacoma Bridge ஆடுறதைப் பார்த்து ஆடிப்போய், யாரையாவது கடிக்க வேணும் எண்டு கங்கணம் கட்டி  கன்ரினுக்க   இருந்தது தெரியாம, நான் போய் "எங்க இந்த பக்கம், யாரையாவது தேடுறியளோ" எண்டு கதையை தொடக்கினன்.
(Tacoma Bridge ஆடுறதைப் பார்க்க கீழே உள்ள வீடியோ கிளிக் பண்ணவும் ) 


உங்கட வண்டவாளத்தை பாத்திற்று போகலாம் எண்டு வந்தனாங்கள். " என்ன பாலம் இந்த ஆட்டம் ஆடுது", "பாலம் கட்டுற காசை நீங்க சுருட்டினா, பாலம் கட்டேலாது. பாலம் மாதிரி ஒண்டுதான் கட்டேலும்.", " இந்த ஆட்டம் ஆடுது, மகாவலி பாலமும் நீங்களே கட்டினது, அதால திரும்பி போக பயமா இருக்கு ", "உப்பிடி பாலம் கட்டுறதுக்கு தான் நாலு வருசமா கஷ்ரப்பட்டு படிக்கிறியளோ"
"உங்கட பல்லுத்தான் கோணல் எண்டா, கட்டுற கட்டிடங்களுமா கோணல் "

   உண்மையாவே உந்த வீடியோவை போட்டு காட்டுறவன்கள்ள கோபம் கோபமா வந்தது. நல்ல விஷயத்தை போடாட்டியும் பரவாயில்லை. உதுகளை காட்டி எங்கட  மானத்தை வாங்காம இருந்திருக்கலாம்.

  தனிய நிண்டு கடி வாங்கினாலும், என்ர பங்குக்கு திருப்பி குடுக்காம விடேல்ல.  "32  பல்லை பற்றி நாலு வருசமா, 48 மாதமா படிக்கிற ஆக்களுக்கு இது விளங்காது." , "ஆடுற பல்ல புடுங்க எவ்வளவு பந்தா காட்டுரீங்க,    நாங்க எண்டா கையாலேயே புடிங்கி போடுவம்"  எண்டு கொஞ்சம் திருப்பி கொடுத்திற்று இடத்தை காலி பண்ணிரன்.  இந்த கடி பிறகொரு நாள், வினையில வந்து முடிய போகுது எண்டு தெரியாம.

பெடியள் கனபேருக்கு பல்லு பிரச்சினை இருக்கிறதால,   அடிக்கடி dental faculty க்கு பல்லு கிளீன் பண்ண , பல்லு பிடுங்க எண்டு போய் வருவாங்கள். ஓசியில பல்லை காட்ட அதுதான் நல்ல இடம்.  ஒரு நாள் நானும் இருப்புகொள்ளேலாம dental faculty க்கு வெளிக்கிட்டு போயிற்றன்.   
  உண்மையாகவே பல்லு கிளீன் பண்ணுறது கஷ்ரமான வேலைதான். அவ்வளவு நாளா அடைஞ்சு கிடந்த அழுக்கை, மற்ற இடங்களில படாம சுரண்டி கொட்டி அகற்றிறது எண்டது  லேசான வேலை இல்லை.  அதைவிட கஷ்டமான வேலை அவ்வளவு நேரமும் வாயை ஆ வெண்டு திறந்து வைச்சுக்கொண்டு இருக்கிறது.  கிர் கிர் எண்டு சுரண்டுற machine ஒரு பக்கம், சுரண்டி கொட்டுறதை உறிஞ்சிற machine மற்ற பக்கம் எண்டு ரெண்டு machines வாய்க்குள்ள tinkering வேலை செய்யேக்க தலை சும்மாவே கிறுகிறுக்கும். 

  எல்லாம் ஒழுங்காதான் போய்க்கொண்டிருந்தது. ஆனா இடையில ஓரார் வந்து "இவர் தானடி அண்டைக்கு Engineering Exhibition இல பல்லை கையால புடுங்குவன் எண்டு சொன்னவர் " எண்டு அறிமுகம் செய்து வைச்சிற்று போக, 
"பல்லை கையால புடுங்குவீரோ, இரும் உம்மட எல்லா பல்லையும் புடுங்கி கையில தாறன்", " அவற்ற பல்லு இருக்கிற இருப்பில நக்கல் வேற" எண்டு தொடக்கி கிளீன் பண்ணி முடியும் மட்டும் ஒரே கடி.  கடி வாங்கிறதை விட கொடுமை, பல்லு கிளீன் பண்ணேக்க கடி வாங்கிறது. வாயை ஆ வெண்டு திறந்து வைச்சுக்கொண்டு இருக்கவேணும். ஒரு சொல்லும் திருப்பி கதைக்கேலாது.  ஒரு மாதிரி கிளீன் பண்ணி முடிய, இன்னும் உம்மட சூத்தை பல்லை அடைகேல்ல, மூண்டு மாதத்தில திரும்ப வரோணும் எண்டு அனுப்பி விட தலையை ஆட்டி thank  you  சொல்லிற்று அக்பர் விடுதிக்கு நடையை கட்டினன்.
  அதுக்கு பிறகு Dental Faculty க்கு பல்லை காட்டிக்கொண்டு போறேல்ல. 

2 comments:

Anonymous said...

>Wednesday, July 27, 2011

இது ஏன் July 2011 இல் போயிருக்கு?

Anonymous said...

Wednesday, July 27, 2011

Nothing after that?